ஐரோப்பா

இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் விடுத்துள்ள 21 நாடுகள் : போரை கைவிடுமாறு கோரிக்கை

இஸ்ரேலின் காஸா முற்றுகையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என 21 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிப்பது குறித்து சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.இருப்பினும் இஸ்ரேல் தொடர்ந்து காஸா மீது குண்டுவீசியும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களைத் தாக்கியும் வருகிறது. இந்த நிலையில் பல நாட்டு அரசாங்கங்கள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வருகின்றன.

அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் காற்றில் பறத்தியுள்ளது. பாலஸ்தீன மக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் உடனடியாக களமிறங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க ஒன்றியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என அறிவித்துள்ளது Belize.

Israel-Hamas war so far: What to know about the attacks, casualties,  hostages and the response - The Globe and Mail

இஸ்ரேலின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கை ஏற்பதாக இல்லை என பிரேசில் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் என கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ அழைப்பு விடுத்துள்ளார்.இதனிடையே, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு கியூபா கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததே இந்த வன்முறைகளுக்கு காரணம் என விமர்சித்துள்ளது இந்தோனேசியா.

ஈரானும் ஈராக்கும் தங்களின் பாலஸ்தீன ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு விநியோகத்தை தடுப்பது என்பது மனிதத்தன்மையற்ற செயல் என அயர்லாந்து பிரதமர் Leo Varadkar இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குவைத் கேட்டுக்கொண்டுள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் முழு ஆதரவு எப்போதும் உண்டு என மொராக்கோ அறிவித்துள்ளது.

மலேசியா, மாலைத்தீவு, நார்வே, ஓமன்,அயர்லாந்து, கத்தார், ரஷ்யா, சிரியா, தென்னாப்பிரிக்கா, வெனிசுலா ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்