ஜெர்மனியில் புலம்பெயர்ந்தவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெர்மனியின் எஸன் மற்றும் பயண் மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களுக்கான தேர்தல் இடம்பெற்றது.
இந்த நிலையில் ஜெர்மனியில் எதிர் காலத்தில் அகதி கோரிக்கை என்பது முன்வைக்க முடியாத நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்து இருக்கின்றது.
தற்பொழுது ஜெர்மனியின் அரசியலில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. குறிப்பாக பயண் மாநில முதல்வர் சோல்டர் அவர்கள் தெரிவிக்கையில் ஜெர்மனி நாட்டில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கை காரணமாக AFD கட்சியானது பாரிய வளர்ச்சியை கொண்டுள்ளது.
இதன் காரணத்தினால் ஜெர்மனியின் அடிப்படை சட்டம் 16 இல் அகதி அந்தஸ்து பெறுவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த சட்டத்தை பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவேண்டிய சூழ்நிலை உள்ளதாக அவர் கூறியிருக்கின்றார்.
16வது சட்டத்தில் இதுவரை காலங்களும் சில திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டிருந்தோம், இந்நிலையில் தற்பொழுது இந்த அகதிகளுக்கான சட்டம் மீண்டும் நடைமுறையில் இருக்கவேண்டுமா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருக்கின்றார்.