ஹாங்காங்கில் புது விதமாக கடத்தப்பட்ட 11 கிலோ கோகோயின் போதைப்பொருள்
ஹாங்காங் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் மின்சார சக்கர நாற்காலியின் மெத்தைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கோகோயின் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
1.5 மில்லியன் டாலர் (1.26 மில்லியன் பவுண்டுகள்) மதிப்புள்ள இந்த போதைப்பொருள் , 51 வயதுடைய நபர் ஒருவர் சுங்கச் சாவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
கரீபியன் நாடான Sint Maarten இல் இருந்து பாரிஸ் ஊடாக வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டபோது மேலும் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது மற்றும் அதன் இருக்கை குஷன் மற்றும் பின்புறம் மீண்டும் தைக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்தது.
ஹொங்கொங்கைச் சேர்ந்தவராத மற்றும் நடமாட்டம் தொடர்பான பிரச்சினைகளைக் கொண்ட அந்த நபர், தான் ஒரு கார் வாடகை நிறுவனத்தின் இயக்குனர் என்றும், சக்கர நாற்காலி தனக்கு ஒரு நண்பரால் கடனாக கொடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.