போலந்து மற்றும் பிரான்சில் போலி வெடிகுண்டு மிரட்டல்கள்
போலந்து தலைநகர் வார்சாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்தனர். மத்திய வார்சாவில் உள்ள பில்சுட்ஸ்கி சதுக்கத்தில் உள்ள ஸ்மோலென்ஸ்க் நினைவுச்சின்னத்தில் இருந்து அவர் மிரட்டல் விடுத்தார்.
இந்த நினைவுச்சின்னம் 2010 இல் ரஷ்யாவில் 96 பேரைக் கொன்ற விமான விபத்தில் இறந்தவர்களின் நினைவாக உள்ளது. 3 மணி நேரத்துக்கும் மேலாக முயன்று அவர் பிடிபட்டார்.
பையை சோதனை செய்தபோதும் சந்தேகப்படும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. இந்த நேரமெல்லாம் தலைநகர் பொலி ஸ் சுற்றிவளைப்பில் இருந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிரான்சில் உள்ள புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகம் மற்றும் புகழ்பெற்ற வெர்சாய் அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இரண்டு இடங்களிலும் குண்டுவெடிப்பு நடத்தப்படும் என அதிகாரிகளுக்கு கடிதம் வந்தது.
ஆனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. பொலிசார் வந்து இரு இடங்களிலிருந்தும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களை அப்புறப்படுத்தினர்.
உலகப் புகழ்பெற்ற மோனாலிசா உள்ளிட்ட ஓவியங்கள் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு தினமும் சராசரியாக 40,000 பேர் வந்து செல்கின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் சூழலில், மற்ற ஐரோப்பிய நாடுகளும் உஷார் நிலையில் உள்ளன.