கொக்குத்தொடுவாய் – புலிபாய்ந்தகல் பகுதியில் சட்டவிரோத வாடிகள்… தயங்கும் அதிகாரிகள்
கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களால் சட்டவிரோதமாக வாடிகள் ஓகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டரை மாதமாகியும் அதிகாரிகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் மீண்டும் புதிய வாடிகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து அவ்விடத்திற்கு சென்று நிலவரங்களை பார்வையிட்டதன் பின்னர் தமிழரசு கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் செயலாளரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான துரைராசா ரவிகரன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியான புலிபாய்ந்தகல் கடற்கரையை அண்டிய பகுதி இதனோடு இணைந்த பல ஏக்கர் காணிகள் சிறு தானிய பயிர்ச்செய்கைக்காக தமிழ் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது வன இலாகா கையகப்படுத்தியுள்ளது.