செய்தி

காஸாவுக்கு அருகே அதிரடி நடவடிக்கையில் இஸ்ரேல் – குவிக்கப்பட்ட கவச வாகனங்கள்

இஸ்ரேல் கவச வாகனங்களைக் குவித்து வருவதனால் காஸா வட்டாரத்துக்கு அருகே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவினருக்கு எதிராகப் பெரிய அளவில் தரைவழித் தாக்குதல் விரைவில் தொடங்கக்கூடும். இதற்கிடையே காஸாவில் நிலைமை மோசமடைந்து கொண்டிருக்கிறது.

அங்கு உணவும் தண்ணீரும் தீர்ந்துகொண்டிருப்பதாக ஐக்கிய நாட்டு உலக உணவுத் திட்டப் பிரிவு தெரிவித்தது.

பாலஸ்தீன வட்டாரத்தில் உள்ள ஒரே மின்சார நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துபோய்விட்டது.

இப்போது அது மின்-உற்பத்தி இயந்திரங்களை மட்டுமே நம்பியிருக்கிறது. இஸ்ரேலியப் பிணையாளிகள் விடுவிக்கப்படும் வரை முற்றுகை முடிவுக்கு வராது என்று இஸ்ரேல் கூறுகிறது.

காஸாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகளுக்கு அத்தியாவசிய மருத்துவச் சேவைகளோ சுத்தமான குடிநீரோ கிடைக்கவில்லை என்கிறது ஐக்கிய நாட்டு நிறுவனம்.

கடந்த வாரம் சனிக்கிழமை இஸ்ரேல் மீது காஸா நடத்திய தாக்குதலில் 1,300 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 150 பேர் காஸாவுக்குள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.

இஸ்ரேலிய ராணுவம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறிவிட்டது என்பதை அந்நாட்டுத் தற்காப்புத் தளபதி ஒப்புக்கொண்டார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!