காஸா எல்லையை மீட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!
காஸா – பாலஸ்தீனத்திற்கு இடையில் நான்காவது நாளாக தொடரும் மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், காஸா எல்லைப்பகுதியை மீட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவான Ezzedine al-Qassam Brigades, “ஆக்கிரமிப்பின் (இஸ்ரேல்) அனைத்து குற்றங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டது” என்று கூறியுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலின் கடுமையான வலதுசாரிக் கூட்டணியின் தலைமையில் இருக்கும் மூத்த தலைவரான நெதன்யாகு, இந்த ஆண்டு நீதித்துறை சீர்திருத்தங்களுக்கான அவரது நிர்வாகத்தின் முன்மொழிவு தேசத்தையும் அதன் இராணுவத்தையும் கூட பிளவுபடுத்திய பின்னர், “தேசிய ஒற்றுமைக்கான அவசர அரசாங்கத்திற்கு” அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் 300,000 பாதுகாப்பாளர்களை அழைத்துள்ளதுள்ளதுடன், காஸா எல்லைப்பகுதியில் இன்னும் மோதல் நீட்டித்து வருகிறது.