இலங்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் உள்ளிட்ட பல விடங்கள் குறித்து Anne-Marie வுடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் Anne-Marie Trevelyan மற்றும் தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் Dr. Naledi Pandor ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் இந்திய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர்  Anne-Marie Trevelyan மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இலங்கையின் பொருளாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்க சட்டமூலம், இணைய பாதுகாப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட முக்கிய சட்டவாக்க நடவடிக்கைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜாங்க அமைச்சருக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேடி பாண்டோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அபிவிருத்திக்கு தென்னாபிரிக்கா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், இந்த வருட இறுதிக்குள் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்