சந்தியாவின் போராட்டம் 5000 நாட்கள்: சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை
தனது கணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டம் 5000 நாட்களைத் தாண்டியுள்ளது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
தனது 5000 நாள் முடிவில்லாப் போராட்டத்தை நினைவுகூர்ந்த அவர், அக்டோபர் 4ஆம் திகதி கொட்டாவ, தனது வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தனது கணவருக்கு நீதி கிடைக்க 5000 நாட்கள் பாடுபட்டு அவமானங்களையும், ஏளனங்களையும் அனுபவித்ததாகவும், தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
நீதியை எதிர்பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக, சர்வதேச விசாரணையை கோர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ள அவர், வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார்.
“நல்லாட்சியின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பயப்பட வேண்டாம், பிரகீத்துக்கு நீதி கிடைக்க நான் உதவுவேன் என்று கூறினார், இன்று ஜனாதிபதியாக இருக்கின்றார்.
நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுமாறு நான் கேட்கவில்லை. ஆனால் அந்த செயல்முறையைத் தடுப்பதை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.