11 கடைகளுக்கு சீல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட தாமரைக் குளம் சாலையில் அமைந்துள்ள அதே பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவருக்கு சொந்தமான தனியார்
வணிக வளாகத்திற்க்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் காலதாமதம் செய்துவந்த நிலையில் அச்சிறுப்பாக்கம் பேருராட்சி
நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் சொத்துவரி பாக்கி செலுத்தாததால் வணிக வளாக
11 கடைகளுக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைப்படி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி பேரூராட்சி அதிகாரிகள் இன்று சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.





