முல்லைத்தீவில் துப்பாக்கிகளுடன் சிக்கிய நபர்

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி இரண்டினை வைத்திருந்ததன் பேரிலே 34 வயதுடைய நபர் இடியன் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)