அமெரிக்காவுக்கு வைத்த பொறியில் சிக்கியது சீன கப்பல்!!!! 55 பேர் பலி
அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக சீனா அமைத்த நீருக்கடியில் பொறியில் அந்நாட்டுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 சீன மாலுமிகள் கொல்லப்பட்டனர்’ என்று பிரித்தானிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களை சேதப்படுத்துவதற்காக மஞ்சள் கடலில் நீருக்கடியில் சீனா பொறியை அமைத்துள்ளது.
கடந்த மாதம் அவ்வழியாகச் சென்ற ‘093-417’ என்ற தொடர் எண் கொண்ட சீனக் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் பொறியில் சிக்கியது.
இதில் அது சேதமடைந்து நீர்மூழ்கிக் கப்பலுக்குள் இருந்தவர்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால் 55 மாலுமிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அவர்களில் கப்பலின் தளபதி மற்றும் 21 அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த சம்பவத்தை சீன அரசு இரகசியமாக வைத்துள்ளது. இருப்பினும், ‘093-417’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. தற்போது இந்த தகவலை பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ரகசிய விஷயம் கசிந்ததற்கு யார் காரணம் என்பதை கண்டறிய சீன அரசாங்கம் விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.