சிறுவர்களை பாதுகாக்க முதல் நிலத்தடிப் பாடசாலையை நிர்மாணிக்கும் உக்ரேன்

உக்ரைனின் கிழக்கிலுள்ள கார்கிவ் நகரில் முதல் நிலத்தடிப் பாடசாலை கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்படப்டுள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா அடிக்கடி நடத்தும் வெடிகுண்டு, ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நகரத்தின் மேயர் கூறினார்.
நிலத்தடிப் பாடசாலை இருந்தால் ஏவுகணைத் தாக்குதல்களின்போதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பாக நேரடிக் கல்வியைத் தொடரமுடியும் என்றாரவர்.
உக்ரேனில் போரினால் நிறையப் பள்ளிகள் இணையம்வழி கல்வியைக் கற்றுக்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
கடந்த செப்டம்பர் முதல் தேதி உக்ரேனில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியது. அதற்காகப் பல்வேறு ரயில் நிலையங்களில் 60 வகுப்புகள் அமைக்கப்பட்டு 1,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
(Visited 8 times, 1 visits today)