இலங்கையில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிகை அதிகரிப்பு
இலங்கையில், 4000க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் இருப்பதாக தேசிய சமூக மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
24 மாநகர சபைகள் மற்றும் 41 மாநகர சபைகளை மையப்படுத்தி செப்டெம்பர் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கணக்கெடுப்பு முடிந்த பின்னர் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பற்றிய தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நாட்டில் சிறுவர் பிச்சை எடுப்பதை நிறுத்துவதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றை சிபாரிசு செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)