அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கத்தின் முன்னணி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, இதே காலப்பகுதியில் அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் (OPD) சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் 42% அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு நோயாளர்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)