ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைககு வெள்ளிப் பதக்கம்
2023, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் 61.57 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து போட்டியில் நதீஷா தில்ஹானி லேகம்கே இலங்கைக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
இப்போட்டியில் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும் சீனா வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டது.
2006 இல் சுசந்திகா ஜயசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் 17 வருடங்களின் பின்னர் தடகளப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
(Visited 20 times, 1 visits today)





