கனடாவில் தம்பதிக்கு நேர்ந்த கதி – கரடியைக் கருணைக் கொலை செய்யும் அதிகாரிகள்
கனடாவில் கரடி தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அல்பெர்ட்டா (Alberta) மாநிலத்தில் உள்ள பான்ஃப் (Banff) தேசியப் பூங்காவில் வெள்ளிக்கிழமை அந்தச் சம்பவம் நடந்தது.
கனடாவின் தேசியப் பூங்காக் கழகம் அந்தத் தகவலைத் தெரிவித்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் அங்கு இருவர் உயிரிழந்து கிடந்ததைக் கண்டனர்.
அதிகாரிகள் கரடியைக் கருணைக் கொலை செய்ய வேண்டி வந்தது.
தேசியப் பூங்காவில் சம்பவம் நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்படும் என்று பூங்காக் கழகம் கூறியது.
ஆண்டுதோறும் 4 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் பான்ஃப் (Banff) தேசியப் பூங்காவுக்குச் செல்கின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





