சீனாவில் சவர்க்காரத்தை சாப்பிட்டு பாதுகாப்பானதென நிரூபித்த நிறுவனத் தலைவர்

சீனாவின் Hongwei சவர்க்கார நிறுவனம் சவர்க்காரத்தை சாப்பிட்டு பாதுகாப்பானதென நிரூபித்துக் காட்டியுள்ளது.
இதனை அதன் நிறுவனம் இணையம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.
அப்போது நிறுவனம் தயாரிக்கும் சவர்க்காரம் உயர் தரமுடையது, பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்ய அவர் சவர்க்காரக் கட்டியைக் கடித்துச் சாப்பிடுவது காணொளியில் பதிவானது.
துணி துவைக்கும் சவர்க்காரத்தைப் பிடித்தவாறு “இதில் நஞ்சு ஏதும் இல்லை. இது செம்மறியாடு அல்லது எருதுக் கொழுப்பால் செய்யப்பட்டது. எங்களுடைய 70 ஆண்டு வரலாற்றில் நாங்கள் வேறு எந்தப் பொருளையும் கலந்ததில்லை,” என்றார் நிறுவனத் தலைவர்.
பல ஆண்டுகளாக விற்பனைப் பிரசாரங்களின்போது நிறுவனப் பிரதிநிதிகள் சவர்க்காரத்தைச் சாப்பிட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்தது.
(Visited 13 times, 1 visits today)