Cayston மருந்தை திரும்பப் பெறும் கனடா மருத்துவ அமைப்பு: வெளியிட்டுள்ள காரணம்
கனடாவில் cystic fibrosis என்னும் பிரச்சினைக்கான மருந்து ஒன்றைத் திரும்பப் பெறுவதாக கனடா மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
Cystic fibrosis என்னும் அந்த பிரச்சினைக்கான Cayston என்னும் மருந்தே திரும்பப் பெறப்படுகிறது.
032168 மற்றும் 033357 என்னும் lot எண்கள் கொண்ட Cayston (aztreonam) மருந்து வைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் குப்பிகளின் சுவர்களில் கீறல்கள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அப்படி கீறல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருந்துக்குள் கண்ணாடித் துகள்கள் கலந்திருக்கக்கூடும்.
ஆகவே, இந்த எண்கள் கொண்ட மருத்துகளை யாராவது வாங்கியிருந்தால் அவற்றை உடனடியாக திருப்பிக் கொடுக்குமாறும், அந்த மருந்தை உட்கொண்டதால் உடலில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கனேடிய சுகாதார அமைப்பு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.