மன்னார் – முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடையில் மீட்கப்பட்ட சடலம்

மன்னார் – சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் குறித்த சடலம் காணப்படுகின்றது.
முத்தரிப்புத்துறை மீனவர்களால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்கள் குறித்த சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிஸாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
(Visited 12 times, 1 visits today)