பிரிட்டன் ராணுவத்தில் களமிறங்கவுள்ள ரோபோக்கள் – மூத்த உயர் ஜெனெரல் தகவல்
2030ஆம் ஆண்டுக்குள் பிரித்தானிய ராணுவத்திற்காக ரோபோக்கள் போராட்டக்கூடும் என மூத்த ராணுவ ஜெனெரல் கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்பட்ட ஸ்ட்ரைக் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. Kalashnikov ZALA மற்றும் Lancet என பெயர் கொண்ட இந்த AI ட்ரோன்கள் தனது இலக்கை சுயாதீனமாக கண்டுபிடித்து அழிக்கும் மற்றும் தன்னாட்சி திறன் கொண்டவை ஆகும்.இதுபோன்ற ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், பிரித்தானிய ராணுவத்தில் ரோபோக்கள் போராடக்கூடும் என்று மூத்த ராணுவ அதிகாரி ஜெனெரல் காலின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏழு ஆண்டுகளுக்குள், அதாவது 2030ஆம் ஆண்டுக்குள் போர்க்களத்தில் சாத்தியமான முதல் தொடர்பு ரோபோ எதிரியுடன் போராடுவது செய்யப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.பெரும்பாலான ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா தரை மற்றும் கடல் வாகனங்களுக்கு சில மனித உள்ளீடு தேவைப்படுகிறது. ஆனால், அந்த நிலைமை எதிர்காலத்தில் மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது, துருக்கியில் தயாரிக்கப்பட்ட கார்கு-2 தாக்குதல் ஆளில்லா விமானம், போரால் பாதிக்கப்பட்ட லிபியாவில் போரிடும் கட்சிகளுக்கு இடையே நடந்த போரின்போது முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளது.அதேபோல், இஸ்ரேல் ஹமாஸ் போராளிகள் மீது தாக்குதல்களை நடத்த 2021ஆம் ஆண்டு AIஆல் வழிகாட்டப்பட்ட ட்ரோன் திரளை ஏவியது குறிப்பிடத்தக்கது.