20 ரயில் இன்ஜின்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா!

ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், சேவையில் இருந்து நீக்கப்பட்ட என்ஜின்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
மேலும், இந்த ரயில் என்ஜின்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றதா என்பதை கண்டறிய தொழில்நுட்பக் குழுவொன்றை எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், இந்த இன்ஜின்கள் நாட்டிற்குள் ஏற்றுக்கொள்ளப்படுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)