அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு பாலஸ்தீனியர்கள் பலி
வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான துல்கரேமில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம்,தாக்குதலில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான அசித் அபு அலி மற்றும் 32 வயதான அப்துல்ரஹ்மான் அபு தகாஷ் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்,
இஸ்ரேலிய இராணுவம் நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமுக்குள் “ஒரு போராளிக் கட்டளை மையம் மற்றும் வெடிகுண்டு சேமிப்பு வசதியை” அழிக்கச் சென்றதாகக் கூறியது.
பொறியியல் பிரிவுகள் சாலைகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பல குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும், ஆயுதமேந்திய பாலஸ்தீனியப் போராளிகள் தாக்குதல் நடத்திய இராணுவத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், வெடிபொருட்களை வீசியதாகவும், இஸ்ரேலிய துருப்புக்கள் நேரடி துப்பாக்கிச் சூட்டில் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், இஸ்ரேலியப் படைகள் நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் ஒரு சோதனையின் போது 21 வயதான அய்ட் சமிஹ் காலித் அபு ஹர்ப் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.