AI பயன்பாட்டினால் காத்திருக்கும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் போர்க்களத்தில் பயன்படுத்தப்படும்போது எதிர்பாராத மோதல் ஏற்படும் அபாயத்தை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய தொழில்நுட்பத்தால் இயங்கும் ஆயுதங்கள் அதிவேகமாகச் செயல்படும் ஆற்றல் கொண்டவை. அதனால் பல சூழ்நிலைகளில் உலகத் தலைவர்கள் முடிவெடுப்பதற்கான நேரம் கணிசமாகக் குறையும்.
பலதரப்புகள் இணையும்போது தரங்களையும் நெறிமுறைகளையும் சிறந்த முறையில் உருவாக்க முடியும். வல்லரசு நாடுகளுக்கிடையே உள்ள தொழில்நுட்பப் போட்டி குறித்து அவரிடம் வினவப்பட்டது.
அதை ஒரு போட்டியாகக் கருதினால் தீர்வுகளை அடைவது கடினம்; போட்டி பின்னர் மோதலாக மாறும் ஆபத்து உள்ளது. ஆனால் அதே போட்டி புத்தாக்கத்திற்கு வழிவகுத்தால் உலகத்தில் முக்கிய முன்னேற்றங்களைக் காண இயலும்.
உச்ச வல்லரசுப் போட்டாபோட்டி, பருவநிலை மாற்றம். இவை போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கும் உலகில் அனைத்துலகத் தலைமைத்துவம் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.