உக்ரைனிடம் கைப்பற்றும் ஆயுதங்களை ஈரானுக்கு அனுப்பும் ரஷ்யா!
போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது. இதன்காரணாக உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை மொஸ்கோ கைப்பற்றி, அதனை ஈரானுக்கு அனுப்பிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், போருக்கான ஆதரவை தக்கவைப்பதற்காக தெஹ்ரானில் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கத் தயாரிப்பான ஜாவெலின் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும், ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் கடந்த ஆண்டு ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அவற்றில் ஏதேனும் ஒன்றை ஈரான் வெற்றிகரமாக மாற்றியமைத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகின்றது.