உள்ளுராட்சி சபை தேர்தல் : வேட்பு மனுக்களை இரத்து செய்ய தீர்மானம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் குழு ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளது.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று (21.09) நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





