விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை கரைக்க சென்ற நபர் மரணம்

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மேல்புழுதியூர் உள்ள ஏரியில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றபோது எதிர்பாராத விதமாக மண் கொள்ளையர்களால் தோண்டப்பட்ட பள்ளத்தில் உள்ள சேற்றில் சிக்கி பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கிற ராஜ்குமார் நீரில் மூழ்கி பலியானார்.
தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு ராஜ்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 15 times, 1 visits today)