ஜெர்மனி மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனி நாட்டில் உணவு பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன.
ஜெர்மனியில் உணவு பொருட்களுடைய விலையானது கடந்த மாதத்துடன் ஒப்பிடும் பொழுது 2.7 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜெர்மனி நாட்டில் கொவிட் தொற்றின் பரவலால் கடந்த 2 வருடங்களில் உணவு பொருட்களின் விலையானது சற்று அதிகரித்து காணப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த ஆடி மாதம் இந்த உணவு பொருட்களின் விலையானது 2.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்ததாகவும்,
இதேவேளை கடந்த ஆனி மாதம் 2.9 சதவீதமாக இந்த உணவு பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இவ்வாண்டானது எரிப்பொருட்களுடைய விலையானது மிகவும் குறைவடைந்துள்ள காரணத்தினால் இவ்வாறு உணவு பொருட்களுடைய விலையானது குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எரிபொருட்களின் விலையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 15.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் விலங்குகளுக்கான உணவு பொருட்களின் விலையானது 21.4 சதவீதமானவும்,
இரசாயன பொருட்களுடைய விலையானது 18.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்த காரணத்தினால் இவ்வாறு உணவு பொருட்களுடைய விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.