வெற்றிகரமாக உக்ரேன் துறைமுகம் சென்றடைந்த 2 சரக்குக் கப்பல்கள்
2 சரக்குக் கப்பல்கள் உக்ரேன் துறைமுகம் சென்று சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கருங்கடலில் புதிய பாதையில் பயணம் செய்த சரக்குக் கப்பல்கள் நேற்று முன்தினம் சோர்னோமோர்ஸ்க் (Chornomorsk) துறைமுகத்தை அடைந்ததாக அதிகாரிகள் கூறினர்.
உலகச் சந்தைக்கு அனுப்ப வேண்டிய 20,000 டன் கோதுமை உக்ரேனில் உள்ளது. உக்ரேனியத் துறைமுகத்துக்குச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உடன்பாட்டிலிருந்து ரஷ்யா அண்மையில் விலகியது.
அதன்பிறகு முதன்முறையாக கப்பற்படையைச் சேராத கப்பல்கள் உக்ரேனியத் துறைமுகத்தை அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
உக்ரேனிலிருந்து புறப்படும் கப்பல்களுக்காக மட்டுமே அந்தப் பாதை முன்னர் பயன்படுத்தப்பட்டது.
உக்ரேனியத் துறைமுகத்தை அடைந்த கப்பல்கள் மூலம் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் கோதுமை அனுப்பப்படும் என்று உக்ரேனிய வேளாண் அமைச்சு கூறியது.