பிரெஞ்சு தூதரும் அதிகாரிகளும் நைஜர் இராணுவத்தின் பிடியில்!!!உணவு விநியோகமும் நிறுத்தம்
நைஜரில் பிரான்ஸ் தூதர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் இராணுவ ஆட்சியாளர்களால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நைஜர் தலைநகரான நியாமியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்டோர் கைதிகள் என்றும், அவர்களை தூதரகத்தை விட்டு வெளியேற இராணுவம் அனுமதிக்காது என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.
நைஜரில் ஆளும் இராணுவம் தூதரகத்திற்கு உணவு விநியோகத்தை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
நைஜர் இராணுவம் சதி செய்து, நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே, பிரெஞ்சுத் தூதரையும் மற்ற பிரெஞ்சு இராஜதந்திரிகளையும் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது.
இருப்பினும், பிரெஞ்சு தூதரும் மற்றவர்களும் இணங்கவில்லை. அந்த நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்கவில்லை என்று அவர்கள் கூறிவந்தனர்.
ஆனால் அவர்கள் தற்போது இராணுவத்தின் பணயக்கைதிகளாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.