புதுக்கோட்டை என்றைக்கும் அதிமுக கோட்டை
																																		சிவகங்கை மாவட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டைக்கு வருகை தந்தார் அவருக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கட்டியா வயல் அருகே பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது
தாரை தப்பட்டை மயிலாட்டம் ஒயிலாட்டம் கட்ட கால் கரகாட்டம் ஆகியவற்றுடன் 2000க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்ட
இதன் பின்னர் மேடை ஏறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது
இதன் பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புங்கோத்துக்களை வழங்கினார்கள்
அதனை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பேசுகையில் இரவு நேரம் ஆகியும் தங்களுடைய வேலை எல்லாம் விட்டுவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கி என்னை வரவேற்பதற்காக வந்து உள்ளீர்கள் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு புதுக்கோட்டை என்றைக்கும் அதிமுக கோட்டை என்பதை இன்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நிரூபித்து விட்டீர்கள் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்
இதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையம் புறப்பட்டு சென்றார்
        



                        
                            
