ஆயுத விநியோகம் தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்துமாறு பிரித்தானியா வலியுறுத்தல்!
ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விநியோகிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவருமாறு பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இடையிலான சந்திப்பு இன்று (13.09) இடம்பெற்றுள்ள நிலையில் பிரித்தானியா மேற்படி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர், ரஷ்யாவுடனான ஆயுதப் பேச்சுவார்த்தையை நிறுத்துமாறும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்கக் கூடாது என்று பியாங்யாங் செய்துள்ள பொது உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளார்.
“இந்தப் பயணம் உலக அரங்கில் ரஷ்யாவின் தனிமைப்படுத்தலை முன்னிலைப்படுத்த உதவுகிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் புடினின் உக்ரைன் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகம் ஒன்றுபடுவதால் அவர் வடகொரியாவுடன் ஒன்றிணைய வழிவகுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.