சரிந்த வங்கி கட்டமைப்பு – பதற்றத்தைத் தணிக்க அமெரிக்க வங்கிகள் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் பெரிய 11 வங்கிகள் இணைந்து சிக்கலில் சிக்கியிருக்கும் First Republic வங்கிக்கு 30 பில்லியன் டொலர் மதிப்புடைய ஆதரவுத் திட்டத்தை அறிவித்துள்ளன.
Silicon Valley Bank, Signature Bank ஆகிய இரண்டு வங்கிகள் அண்மையில் முடங்கியது.
இதனை அடுத்து அந்நாட்டின் பங்குச் சந்தையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தனியார் வங்கிச் சேவைகள், சொத்து நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபடும் First Republic வங்கி மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அடிபடையானது. அதன் பங்கு விலைகள் 30 சதவீதம் சரிந்தன.
வங்கியும் முடங்கிவிடுவதைத் தவிர்க்க JPMorgan Chase, Bank of America உள்ளிட்ட அமெரிக்காவின் பெரிய வங்கிகள் உதவ முன்வந்தன.
First Republic வங்கியின் பங்கு விலைகள் 10 சதவீதம் அதிகரித்தன.
அமெரிக்காவின் மத்திய வங்கியும் பதற்றத்தைத் தணிக்கப் புதிய கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. திட்டத்தின் கீழ் சுமார் 12 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வங்கிகள் இதுவரை மத்திய வங்கியிடமிருந்து மொத்தம் சுமார் 165 பில்லியன் டொலர் கடன் கோியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.