இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு!
இலங்கையில் நடத்த உள்நாட்டு போரின்போது அவையங்களை இழந்து அங்கவீனமுற்றோர் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு உதவிதொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, அங்கவீனமுற்ற ஒருவர் 55 வயதை அடையும் முன் இறந்தால், அந்த மரணத்திற்கான காரணத்தை மருத்துவ வாரியம் உறுதிப்படுத்த வேவண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து கணிசமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, ஓய்வுபெற்ற ஊனமுற்ற சேவையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் சில குழுக்கள் இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானித்துள்ளதாகவும் ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை எதிர்காலத்திலும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.