அமைச்சுப் பதவி வேண்டாம் – தயாசிறி திட்டவட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சு பதவியை வழங்க அழைப்பு விடுத்தாகவும், ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ள தான் தயாராக இல்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தான் அடுத்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக சிலர் கூறினாலும், தான் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)