மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட புலிகளின் தகட்டிலக்கம் – தகவல் தர மறுத்த சட்டவைத்திய அதிகாரி
 
																																		முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் நேற்றைய நான்காம் நாள் அகழ்வாய்வில் விடுதலைப்புலிகளின் த.வி.பு. இ-1333 தகட்டிலக்கம் ஒன்று மீட்கப்பட்டதாக உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவனிடம் வினவியபோது, அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் புதனன்று (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் நான்காம்நாள் அகழ்வாய்வுகள் நேற்று (09) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த அகழ்வாய்வுகள் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி, தடயவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
 
        



 
                         
                            
