பல்கலை மாணவர்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பு!

பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆராயுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை மாணவர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஏற்கனவே 144 வீட்டுத் தொகுதிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று நிர்மாணிக்கபபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குடியிருப்பில், 800 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இது குறித்த அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)