இலங்கையில் உடல் நிறத்தை மாற்றும் ஊசிகளை விற்பனை செய்த மோசடி வெளியானது
சருமத்தை ஒளிரச் செய்வதாகக் கூறி புற்றுநோயை உண்டாக்கும் தடுப்பூசிகளை பெண்களுக்கு விற்கும் மோசடி வெளியாகியுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அந்த தடுப்பூசிகள் இலட்சக்கணக்கான ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி நாட்டில் எந்த மருந்தையும் அல்லது தடுப்பூசியையும் விற்க முடியாது.
இந்நிலையில், உடல் நிறத்தை மாற்றும் தடுப்பூசிகளை விற்பனை செய்யும் மோசடி பற்றிய தகவல் கிடைத்திருந்த நிலையில், தற்போது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் அழகு நிலையம் நடத்தும் போர்வையில் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் உறுதியாகியுள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு இந்தத் தடுப்பூசி விற்பனை மோசடி நடந்து வரும் பின்னணியில் தடுப்பு மருந்துகளை விற்பனை செய்யும் நபர் ஒருவர் நபர் குறித்த தகவலும் வெளியாகியிருந்தது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில், ஹலவத்த பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தை அடையமுடிந்துள்ளது.
அங்கு 10 தடுப்பூசிகளை 558,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டனர்.
உடல் நிறத்தை மாற்றும் ஊசி மருந்துகளை உரிய அனுமதியின்றி விற்பனை செய்வது தொடர்பாக அறிவித்ததன் பிரகாரம், நுகர்வோர் அதிகாரசபையின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அந்த இடத்தை சோதனையிட்டனர்.
இந்த நிறமாற்ற ஊசி மருந்துகளுடன் அழகு நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார், இது ஒரு புற்றுநோயைத் தூண்டும் தடுப்பூசி என ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.