யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கொழும்பு பகுதியைச் சேர்ந்த நபர் கைது
யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்குடன் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை எடுத்து வந்த கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை 6 மணியளவில் யாழ்பபாணம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பு அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
சந்தேக நபரிடமிருந்து 33 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கொழும்பு தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
(Visited 14 times, 1 visits today)





