இலங்கை செய்தி

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வு பணியானது நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும் , எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார்.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை