கட்சி என்ற ரீதியில் உடன்படவில்லை, ஆனால் மக்களுக்காகவே செய்கிறோம் – சாகர!
கட்சி என்ற ரீதியில் நாம் உடன்படாவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மக்கள் கேட்டதை பெற்றுக் கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (04.09) நடைபெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மக்கள் சலுகைகளை கோரவில்லை. அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் வரி வசூலை குறைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். எனவே அந்த கோரிக்கைகளை ஜனாதிபதி பின்பற்றி வருகிறார்.
“தெருக்களில் அரகலய போராட்டத்தை நடத்தி, இவற்றைக் கோரியவர்கள் தற்போது அவற்றைப் பெற்றுக் கொள்கின்றனர். கட்சி என்ற அடிப்படையில் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நாங்கள் உடன்படவில்லை.
ஆனால் நாங்கள் மக்களுக்காக வேறு ஒரு பிரேரணையை முன்வைக்க முடிவு செய்துள்ளோம், அவர்கள் விரும்பினால் வாக்களிப்பார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் முன்னோக்கி செல்ல விரும்பினால், நாங்கள் அவர்களை அனுமதிக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில், மக்களின் பார்வையை பொறுத்தே நாடு முன்னோக்கிச் செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.