ஆசியா செய்தி

இந்திய பயணத்தை ரத்து செய்யவுள்ள சீன ஜனாதிபதி

அண்டை நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இந்திய பயணத்தை ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகள் இடம் பெற்றிருந்ததே இந்த நெருக்கடிக்குக் காரணம்.

எதிர்வரும் செப்டம்பர் 9,10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். சீன ஜனாதிபதியும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்க்க கூடுமென இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இரு நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி, சீன ஜனாதிபதி அநேகமாக இந்தியாவிற்கு விஜயம் செய்யமாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, சீனாவை பிரதிநிதித்துவப்படுத்தி டி20 மாநாட்டில் பிரதமர் லீ குவாங் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின் பிங் கலந்துகொண்டதுடன், இந்திய பிரதமர் மோடியையும் சந்தித்திருந்தார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி கலந்துகொள்ளவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பை தவிர்க்கும் நோக்கிலேயே ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதிகள் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வதை தவிர்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி