வாகரையில் வாகன விபத்து – இரு இளைஞர்கள் படுகாயம் !
மட்டக்களப்பு – வாகரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வாகரை பகுதிக்குச் சென்று மீண்டும் ஊர் திரும்பிச் சென்ற போது மட்டக்களப்பு – திருகோணமலை வீதி உசன ஏற்றம் எனும் பகுதியில் படி ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இவ் விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விபத்துச் தொடர்பில் விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





