ஆசியா

சிங்கப்பூரில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு! இலங்கை இந்தியர்களுக்கு வாய்ப்பு

சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஹோட்டல் துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஊழியர்களை Work permit கொண்டு வர சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.

சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் முதலாம் திகதி முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

உணவகங்களில் வேலைசெய்யும் சமையல்காரர்களை பாரம்பரியமற்ற பணியமர்த்தல் பட்டியலில் சிங்கப்பூர் சேர்த்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு முதல் S PASS தகுதி சம்பளமும், தீர்வைக் கட்டணமும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஊழியர் தட்டுப்பாடுள்ள சேவைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் சில வேலை நிலைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டத்தை சிங்கப்பூர் விரிவுபடுத்துகிறது.

சமீபத்தில் இந்திய உணவகங்களில் சமையல்காரர்களுக்கான விண்ணப்ப செயல்முறையை மனிதவள அமைச்சகம் வெளியிட்டது. இந்தியா, பங்களாதேஷ், மியான்மர், பிலிப்பைன்ஸ், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை அந்த பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தகுதிபெறும் நிறுவனங்கள் சமையல் ஊழியர்களுக்காக வேலை அனுமதி விண்ணப்பங்களை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கலாம். இதற்கு முன்னர் சீனா, மலேசியா, ஹாங்காங், மக்காவ், தென் கொரியா மற்றும் தைவான் ஆகிய பகுதிகளிலிருந்து ஒர்க் பெர்மிட் அனுமதியில் சமையல்காரர்களை சிங்கப்பூர் உணவகங்கள் எடுத்துவந்தன.

(Visited 64 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!