இலங்கையில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் , இராணுவத்தினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு!

அண்மைக்காலமாக இலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும், இராணுவத்தினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிகளை கையாள்வதில் அவர்கள் பெற்றுள்ள பயிற்சியே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுடன் இருக்கும் உறவுகளை விட்டுக்கொடுக்க முடியாமல் முன்னாள் இராணுவத்தினர் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா மேலும் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)