பிரமிட் திட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை!
பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பிரமிட் திட்டம் ஒரு வியாபார முறையல்ல என்றும் அது குற்றச் செயல் என்றும் அமைச்சர் கூறுகிறார்.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் படி, இந்த பிரமிட் திட்டத்தை மத்திய வங்கி தடை செய்துள்ளது.
எனவே குற்றவியல் சட்டம் இந்த பிரமிட் திட்டத்தை பாதிக்கிறது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





