செய்தி தமிழ்நாடு

நெல் கொள்முதல் விவசாயிடம் மோசடி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த  அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வடமன்னிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேலு இவர் தனக்கு சொந்தமான நிலத்திலும் மற்றும் அவரைச் சார்ந்த விவசாயிகளுடைய நெல்லையும்

தன் சொந்த பொறுப்பில் ஏற்றி விற்பனைக்காக புதுவயல் அப்துல்காதர் என்ற நெல் வியாபாரிக்கு லாரி மூலம் நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்பி உள்ளார். இது சம்பந்தமாக 10 லட்சம் நிலுவையில் உள்ளது.

இது குறித்து நெல் வியாபாரி அப்துல் காதரிடம் பலமுறை நேரில் சென்று பணம் கேட்டுள்ளார். ஆனால் விற்பனை செய்த நெல்லுக்கு உண்டான 10 லட்சம் பணத்தை இதுவரை தராததால் விவசாயி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக தொலைபேசி மற்றும் நேரில் சென்று பணம் கேட்டதற்கு உன்னை கொன்று விடுவேன் என மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். ஆகவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி