காலியில் விபத்துக்குள்ளாகிய கார் எரிந்து நாசமானது!

காலி, பலபிட்டிய அத்தேகந்துர கல்வெட்டுக்கு அருகில் இன்று (21.08) கார் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து நாசமானது.
குறித்த சொகுசு கார் டெலிபோன் டவரில் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது காருக்குள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)