ஸ்வீடனில் இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய பெண் கைது
ஸ்டாக்ஹோமில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு வெளியே குர்ஆன் எரிப்பு போராட்டத்தை நடத்திய இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் மீது தீயணைக்கும் கருவியை உபயோகித்த ஒரு பெண்ணை ஸ்வீடன் போலீசார் கைது செய்தனர்.
அந்தப் பெண் சல்வான் மோமிகாவிடம் விரைந்து சென்று, சாதாரண உடையில் இருந்த போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுவதற்கு முன்பு, அவர் மீது வெள்ளைப் பொடியைத்(தீயணைக்கும் கருவி) தெளிப்பதைக் காட்டியது.
திகைத்துப்போயிருந்தாலும் காயமின்றித் தோன்றிய மோமிகா, பின்னர் காவல்துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனது ஆர்ப்பாட்டத்தை மீண்டும் தொடர்ந்தார்.
பொலிஸாரால் அடையாளம் காணப்படாத பெண், பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவித்ததாகவும், பொலிஸ் அதிகாரிக்கு எதிரான வன்முறையாகவும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் டோவ் ஹாக் கூறினார்.
ஈராக்கைச் சேர்ந்த அகதியான மோமிகா, இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டத்தில் குரானை அவமதித்துள்ளார், இது பல முஸ்லீம் நாடுகளில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடிஷ் பொலிசார் அவரது ஆர்ப்பாட்டங்களை அனுமதித்துள்ளனர், அவர் மீது பூர்வாங்க வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் போது பேச்சு சுதந்திரத்தை மேற்கோள் காட்டியது.