எமக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை;சஜித் பிரேமதாச
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலுள்ள அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கமானது நாட்டில் அடக்குமுறைப் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்துகின்றது. மற்றும் தீவிரமான இடதுசாரி மற்றும் முதலாளித்துவத்தைப் பின்தொடராத, மூன்றாம் வழியைப் பின்பற்றும் கட்சி என்ற வகையில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் மட்டுமின்றி பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உரிமைகளையும் பாதுகாக்கும் கடமையுணர்வுடன் தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடினாலும் முறையான மொழிக் கொள்கையைக் கைக்கொள்ளத் தவறிவிட்டது. மேலும், இவ்வாறாக தவறான மற்றும் மோசடியான அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடும் அரசாங்கத்துடன் கைகோர்க்க நான் தாயாராக இல்லை” எனவும் அவர் தெரிவித்ததுடன் நாட்டுக்கு சாதகமான மற்றும் சரியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் இடத்தில் மட்டுமே தான் இருப்பார் என்றும் அவர் பதிவுசெய்தார்.
நேற்று (16) நடைபெற்ற எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.